தமிழகத்தில் தொடர்ந்து வெயில் அனல் காற்றுடன் வீசி வருகிறது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி உள்ளது.
வெயில் காரணமாக மக்கள் வெளியில் தலை காட்ட முடியாமல் கடும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 9 நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தொட்டது மற்றும் தாண்டிது. அதிக அளவாக ஈரோட்டில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
ஈரோடு பகுதி மக்கள் கடும் வெயிலால் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வீசும் வெயிலைப் பார்த்தால் 110 டிகிரி அளவுக்கு இருக்கும் என்று கூறும் அளவிற்கு வெப்பம் உமிழ்ந்தது.
திருச்சியில் 103, திண்டுக்கல்லில் 102, சேலத்தில் 101, திருப்பூரில் 101, மதுரை, கோவை, வேலூர், பெரம்பலூர் ஆகிய நகரங்களில் தலா 100 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.
பிற நகரங்களில் 100 டிகிரிக்கும் கீழே வெயில் வீசினாலும், வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது.
நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளே அதிக சிரமம் அடைந்தனர்.