தூத்துக்குடியில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். போலீசார் நடத்திய இந்த படுகொலைக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு, கண்டனங்களும் தெஇரிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலை செய்தவர்களை கண்டித்தும் இலங்கையில் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காந்திபூங்காவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அழிக்காதே அழிக்காதே தமிழர்களை அழிக்காதே ஈழ தமிழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.