பெரம்பலூர்: உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்பு ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு விருதுகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வழங்கினார்.
வங்கிகயாளர்களுடனான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வங்கிகளின் பணிகுறித்தும், பயிர்க்கடன் மற்றும் கல்விக்கடன் வழங்குவதில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மகளிர் திட்டம், (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) மூலம் இயங்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்பு ஏற்படுத்துவதில் சிறந்து விளங்கிய வங்கிகள் மற்றும் வங்கிக் கிளைகளுக்கு 2013-14 ஆம் ஆண்டிற்கு விருதுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது வழங்கி சிறப்பித்தார்.
அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மாவட்ட அளவிலான சிறந்த வங்கியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலண் இயக்குநர் மிருணாளினிக்கு பாராட்டுச் சான்றிதழையும், கேடயத்தையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து வங்கி கிளைகளுக்கான பரிசு பெறும் பட்டியலில்
முதல் பரிசு பெற்ற பெரம்பலூர் கிளை கனரா வங்கிக்கு ரூ. 15000ம், இரண்டாம் பரிசு பெற்ற குரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிளைக்கு ரூ.10000ம், மூன்றாம் பரிசு பெற்ற எசனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிளைக்கு ரூ.5000த்திற்கான காசோலைகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது, திட்ட அலுவலர் மகளிர் திட்டம், மலர்விழி, மாவட்ட திட்ட மேலாளர், புதுவாழ்வுத் திட்டம், ரூபவேல்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், அருள்தாசன், அனைத்து வங்கி மேளாளர்கள், உதவித் திட்ட அலுவலர்கள், மகளிர் திட்டம், வெங்கடேசன், கள மேலாளர; துரை.அரசு, பெரம்பலூர் வட்டார திட்ட மேலாளர் சங்கரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.