பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட திருவிளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை மகன் கண்ணன் (31). வெளிநாடு சென்றிருந்த இவர், கடந்த சில நாள்களுக்கு முன் திருவிளக்குறிச்சி கிராமத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவரது பெற்றோர் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டுமென கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கண்ணன், நேறறிரவு அப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அவரது தாயார் சின்னம்மாள் (50) அளித்த புகாரின்பேரில், பாடாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்புலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.