உத்திரப்பிரதேசத்தில் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள கோயில் மற்றும் மசூதி ஆகியவற்றால் அப்பகுதி இந்து –இஸ்லாமிய பொதுமக்கள் மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.உத்திரப்பிரதேச மாநிலம் ஃபைஸாபாத் நகரின் அருகேயுள்ள பைகாப்பூரில் அமைந்துள்ளது ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் வளாகம். இதே வளாகத்தில் கோயிலுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது மசூதி. இந்த இரு தலங்களுக்கும், அதாவது ஆஞ்சநேயர் கோயிலுக்கு பக்தர்களும், மசூதிக்கு இஸ்லாமியர்களும் தினமும் வந்து செல்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத ஒற்றுமைகளை சீர்குழைக்கும் விரோதப் போக்கில் சிலர் ஈடுபட்டுவரும் நிலையில், தங்களுக்குள் இதுவரை எந்த மத பாகுப்பாடும் இன்றி, மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக, அப்பகுதியை சேர்ந்த இரு மதத்தினரும் தெரிவித்தனர்.