பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்கானிப்பு குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று பெரம்பலூர் – துறையூர் சாலையில் குரும்பலூர் அருகே விஜயகாண்டீபன் தலைமையிலான தீவிர கண்கானிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையிலிருந்து கரூருக்கு சென்ற லாரியை சோதனை செய்ததில் சந்தேகத்திற்கிடமான முறையில் ரூ. 4 லட்சம் மதிப்புடைய (சுமார் 4 ஆயிரம் சட்டைகள்) 80 பெட்டிகளில் அடுக்கப்பட்டுள்ளதை கண்டனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வாகனத்தை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதனை ஆய்வு செய்த வருவாய் கோட்டாட்சியரிடம் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததை தொடர்ந்து சட்டைகள் மற்றும் வாகனம் விடுவிக்கப்பட்டது.