பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்கானிப்பு குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் கேட் அருகில் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்த சதாசிவம் என்பவரால் டாடாஏஸ் வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1,லட்சத்து 100 மதிப்பிலான ரொக்கம் இன்று (30.04.16) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கம் பெரம்பலூர் கோட்டாட்சியர் பேபி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.