பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தொடர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கைகாட்டியில் வட்டாட்சியர் பிரகாசம் தலைமையிலான நிலையான கண்கானிப்பு குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, திருச்சியிலிருந்து விழுப்புரம் சென்ற அரசு விரைவுப் பேருந்தில் பயணம் செய்த திருச்சி சுந்தர் நகரை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் உரிய ஆவணங்களிலின்றி ரூ.92 ஆயிரத்து 200 எடுத்து செல்வது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து நிலையான கண்கானிப்பு குழுவினர் அப்பணத்தை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபியிடம் ஒப்படைத்தனர்.