பெரம்பலூர் : நடக்க இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்கானிப்பு குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் சட்டப் மன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னமங்கலம் பிரிவு சாலை அருகே பறக்கும் படை அலுவலர், வட்டாட்சியர் மருதைவீரன் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது பெரம்பலூர் ஸ்ரீரெங்கா நகரை சேர்ந்த அப்துல்பாரி என்பவரால் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ரொக்கம் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கப் பணம் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபியிடம் ஒப்படைக்கப்பட்டது.