ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ஆம் நாள் உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புதிதாக எச்.ஐ.வி தொற்று இல்லாத குடும்பத்தை உருவாக்கிடவும், எச்.ஐ.வி தொற்றுள்ளவர்களை புறக்கணிக்காமல் அரவணைத்துச் சென்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலுமான கருப்பொருளை மையமாகக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர். தரேஸ் அஹமது தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
வாழ்வியல் திறன் கல்வி மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வெறுக்கவோ, புறக்கணிக்கவோ கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் சுமார் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் மாவட்ட எய்டஸ் கட்டுப்பாடு அலுவலர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் சம்பத், மாவட்ட திட்ட மேலாளர் மருத்துவர் இளங்கோவன், மாவட்ட நம்பிக்கை மைய மேற்பார்வையாளர் புஷ்பலதா, மாவட்ட எச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீநாதன் மற்றும் களப்பணியாளர்கள் ஒன்றாக அமர்ந்து சமபந்தி உணவருந்தினர்.