பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ஜமீன் பேரையூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் வை. தேசிங்குராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தூய்மையான நீர், தூய்மையான காற்று மாசுபடாமல் பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் முழக்கமிட்டனர்.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி கிராமத்தின் பிரதான வீதிகள் வழியே சென்று, மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.