பெரம்பலூர் : ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் உலகம் முழுவதும் சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக உலக சுற்றுலா தினம்- 2015 கொண்டாடப்பட்டது.
சுற்றுலா தினத்தினைமுன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுற்றுலா விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் மாவட்ட சார் ஆட்சியர் மதுசூதன் ஆட்சியரக வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பாரதிதாசன் பல்கலைகழக உறுப்பு கல்லூரி (குரும்பலூர்) மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆணைய விடுதி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணி மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து புறப்பட்டு புதிய பேருந்து நிலையத்தை சென்றடைந்து. பேருந்து நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி நெற்றியில் சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவை வைக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. பேரணி நிகழ்ச்சியிலும், சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு ஓசை கலைகுழுவினரின் நடன மற்றும் கரகாட்ட இசைநிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.
மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் இளங்கோவன், பாரதிதாசன் பல்கலைகழக உறுப்பு கல்லூரி பேராசிரியர்கள் சுரேஸ் குமார் மற்றும் அருண் மாவட்ட விளையாட்டு அலுவலர் உட்பட பொது மக்கள் கலந்து கொண்டனர்.