லண்டன் சென்றுவந்த பிறகு ஊடக வெளிச்சம் தேவைப்படுவதால்தான், ஸ்டாலின் ஆளுநரை சந்திக்கிறார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவு காலங்களிலும், லாரி ஸ்ட்ரைக் போன்ற கால கட்டத்திலும் மக்கள் பாதிக்காத வகையில் எளிதில் பொருட்கள் கிடைக்க வழிசெய்ய பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.தற்போது லாரி ஸ்ட்ரைக் நடைபெற்று வரும் நிலையில் பொது மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கூடுதல் காய்கறிகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். .மேலும், ஸ்டாலின் ஆளுனரை சந்திப்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், ஸ்டாலினை பொருத்த வரையில் போராட்டம் செய்யாமல் இருந்தால் தான் ஆச்சர்யம் என்றும் ஊடகத்தில் வரும் நோக்கில் ஸ்டாலின் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.