rupee1000பெரம்பலூரில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி சிற்பாக நடத்தப்டபட்டது. அதற்காக, கட்டயா நன்கொடை பல லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை மாவட்ட கல்வி அதிகாரி வெளியிட வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டம் பள்ளக் கல்வித்துறை சார்பில் 2015 டிச.1,2,3 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான 43-வது ஜவகர்லால் நேரு அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

அதில் பள்ளக் கல்வித்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் கண்காட்சிக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், தனியார். பள்ளி நிர்வாகத்திடம் இருந்து ரூ.50லட்சத்திற்கு மேல் கல்வி துறை சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தனியார் பள்ளிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பலஆயிரக்கணக்கில் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிடம் இருந்து நன்கொடை என்ற பெயரில் வலுக்கட்டாயமாக வசூலிக்கப்பட்ட தொகைக்கு உரிய நன்கொடை ரசீதுகள் வழங்கப்பட வில்லை எனவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும் தலா ரூ.2 ஆயிரம் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து தலா ஒருவருக்கு ரூ.200 வீதம் என வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முதன்மை கல்வி அலுவலர் பணியில் இருக்கும்போது எப்பொழுதும் தலைமையிடத்திலேயே குடியிருக்கவேண்டும் என்பது விதிமுறை. ஆனால் தற்போதைய முதன்மை கல்வி அலுவலர் விழுப்புரத்தில் இருந்து தினமும் பெரம்பலூர் வந்துபோகிறார். இதற்காக தினமும் ஒரு தனியார் பள்ளி சார்பில் ரூ. 2ஆயிரம் மறைமுகமாக கட்டாயமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வாடகை காரில் சி.இ.ஓ. தினமும் விழுப்புரம் சென்று வருகிறார்.

மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள் அதிகாரிகள் கூட பெரம்பலூரில் தங்கி பணி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர வேப்பூரில் பணிபுரியும் ஆசிரியர்களும் சி.இ.ஓ. விழுப்புரம் சென்று பெரம்பலூர் வரும் செலவை ஏற்றுக்கொள்கின்றனர். ஆசிரியர்கள் சி.இ.ஓ.விற்கு கைப்பாவையாக சிலர் துணைபோகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லாமல் மட்டம் போடுகின்றனர். மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.

பெரம்பலூர் வருவாய் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை, துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் பள்ளிகளில் சுகாதார வளாகங்கள் உள்ளன. அவை சரிவர பராமரிக்கப்பட முடியாத நிலையில் உள்ளன.

வடகிழக்கு பருவமழை வலுக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே அறிவித்துள்ள நிலையில் அறிவியல் கண்காட்சி நடத்தி அதில் அரசுபள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும் பருவமழைக்காலத்தில் உடல்வருத்தி ஈடுபடுத்தச் செய்தது நியாயமற்ற செயல் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

அரசு பள்ளிகளுக்கு மட்டும்தான் அக்கரை செலுத்தும் இம்மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் முக்கிய விழாக்கள், அவசர நிமித்தமாக செய்யக்கூடிய பணிகளுக்கு தனியாரிடம் இருந்து அதிக அளவில் நன்கொடை எதிர்ப்பார்ப்பதும், அதனை கட்டாயப்படுத்தி வசூலிப்பதும் எந்தவகையில் ஏற்கத்தக்கது என்றும், பெரம்பலூரில் நடத்தப்பட்ட அறிவியல், கணித கண்காட்சிக்கு மாணவ-மாணவிகளை தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான பேருந்துகளில் 3 நாட்களும் அழைத்துவர நூற்றுக்கணக்கான வாகனங்களின் எரிபொருள் மற்றும் டிரைவர் பயணப்படியை தனியார் பள்ளி நிர்வாகங்களே ஏற்றுள்ளன.

அரசின் சுமையை குறைக்கும் வதமாக தனியாரில் பயிலும் மாணவர்களை கல்வித்துறை நடத்துவது குறித்து தனியார் பள்ளி நிர்வாகிகள் வருத்தமளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால், தனியார் மெட்ரிக் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கும் மேலாக, மிக அதிகமாக கல்வி கட்டணத்தை வசூலிக்கின்றன. அதனை தட்டி கேட்க முடியவில்லை.

அறிவியல் கண்காட்சிக்காக வரும் வி.ஐ.பி.க்கள் சட்டையில் அணியும் பேட்ஜ் ஏறத்தாழ 1200 தயாரிக்கப்பட்டது. அதில் மஞ்சள் நிறம் தூக்கலாக இருந்ததால், அனைத்து பேட்ஜ்களும் குப்பையில் வீசப்பட்டது.

ஆனால், இதற்கு முன்பு பணியில் இருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த கல்வி அதிகாரி 6 மாதம் வீட்டிற்கு செல்லாமல் பெரம்பலூரிலேயே தங்கி கல்விச்சேவை செய்தார் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இது எல்லாம் போகட்டும் என்றால் கூட, ஒரு கல்வி அதிகாரி, தன்னுடைய பணியையும், அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்து தினமும் ஒரு தனியார் பள்ளியிடம் ரூ.2 ஆயிரம் வசூலித்து வாடகை காரில் செல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றும், இது குறித்து கல்வி அதிகாரி முனுசாமியின் கருத்தை பதிவு செய்வதற்காக அவர் பயன்படுத்தும் 7373002811 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டும், தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த தகாத செயலை மாவட்ட நிர்வாகம் கண்டிக்க வேண்டும், இல்லை என்றால் தண்டிக்க வேண்டும் என பொதுமக்கள், மக்கள் நல விரும்பிகள், விரும்புகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!