பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின் படி அனைத்து அரசு அலுவலகங்ளிலும் அக். 26 முதல் 31 ஆம் தேதி வரை ஊழல் ஒழிப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட காவல் துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கில் ஊழல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட காவல் கணகாணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையிலான காவல் துறையினர் ஊழலுக்கு எதிரான உறுதி மொழி ஏற்றனர்.
இதேபோல, பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம், பெரம்பலூர், மங்கலமேடு, கை.களத்தூர், வி.களத்தூர், அரும்பாவூர், பாடாலூர், குன்னம், மருவத்தூர் ஆகிய காவல் நிலையங்களில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வளர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.