பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள எசனை ஊராட்சியில் உள்ள ஊர்ப்புற நூலகத்தில் நூலகராக பணிபுரிந்துவருபவர் ஆர்.ராம்குமார் (வயது46).
இவர் 2008 முதல் நடப்பு ஆண்டு வரை நூலகத்துறையில் ஆற்றியுள்ள சேவையை பாராட்டி, தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொதுநூலக இயக்ககம் சார்பில் மாநில அளவில் நூலக தந்தை எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா; வீரமணி இந்தவிருதையும், பாராட்டு பத்திரத்தையும் நூலகா; ராம்குமாருக்கு வழங்கி கவுரவித்தாh;.
விருதுபெற்ற ராம்குமார் எசனை நூலகத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை 600-ல் இருந்து 1420ஆகவும், புரவலர் எண்ணிக்கையை 41-ல் இருந்து 142 ஆகவும் உயர்த்தி பொது நூலகத்துறைக்கும், நூலகவாசகர்களுக்கும் பாலமாக இருந்து செயல்பட்டுள்ளார். விருதுபெற்ற ராம்குமாருக்கு மாவட்ட நூலக அதிகாரி பத்மா மற்றும் நூலகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.