பெரம்பலூர் : பெரம்பலூர் வட்டத்திற்குட்ப்பட்ட எளம்பலூர், எசனை கிராமங்களில் தமிழக முதலமைச்சரின் சிறப்புத்திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (04.07.2015) மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) செல்வி.ச.மீனாட்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா, சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) செல்வி.ச.மீனாட்சி 3,947 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 56 லட்சத்து 18 ஆயிரத்து 279 மதிப்பிலான விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினார்.
அரசு அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் (எளம்பலூர்) ராமசாமி, (எசனை) ராமதேவ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.