பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு கார்ப்ரேஷன் நிறுவனத்தில் செக்யூரிட்டி சூப்பர்வைசர், ஜீனியர் செக்யூரிட்டி சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி செக்யூரிட்டி சூப்பர்வைசர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் பட்டப் படிப்பு பயின்று இருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் செக்ரூட்டி பணியில் முன் அனுபவம் பெற்றிருக்கு வேண்டும். இப்பணியிடத்திற்கான சம்பள விகிதம் ரூ.12000 முதல் 27000 வரை மற்றும் பிறபடிகள் உள்பட.
ஜீனியர் செக்யூரிட்டி சூப்பர்வைசர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மேலநிலைக் கல்வி பயின்று இருக்க வேண்டும். மேலும் ஆறுமாதகாலம் செக்ரூட்டி பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான சம்பள விகிதம் ரூ.11000 முதல் 24000 வரை மற்றும் பிறபடிகள் உள்பட.
மேற்கண்ட பணியிடங்களுக்கு; 20-10-2015க்குள் www.ongcindia.com , என்ற இணையதளத்தில பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது கேட்டுக் கொண்டுள்ளார்.