இது குறித்து ,மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும்,பிரான்ஸ் நாட்டின் எம்ஜிஆர் பேரவைத்தலைவருமான முருக பத்மநாபன், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி, வேல்ஸ்  யுனிவர்சிட்டி  நிறுவனர் ஐசரிகணேஷ் மற்றும் பழம்பெரும் நடிகை லதா ஆகியோர் பேட்டி அளித்தனர்…அதன் விபரம் வருமாறு….உலக எம்ஜிஆர் பேரவை  பிரதிநிதிகள் மாநாடு எதிர்வரும்  ஜூலை 15 இல் சென்னை ,வேல்ஸ் பல்கலைக் கழக  திறந்தவெளி  அரங்கத்தில்  காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை முழுநாள் நிகழ்ச்சியாக நடக்கிறது தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் கவியரங்கம் பட்டிமன்றம் ,வாழ்த்தரங்கம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.உலகின் பல நாடுகளிலிருந்தும்  எம்ஜிஆர் நேசர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். எம்ஜிஆர் நேயர்கள்,ரசிகர்கள்,தொண்டர்கள் என பலருக்கும்  பாராட்டி விருது,வழங்கப்படுகிறது எனக் தெரிவித்தனர்


Copyright 2015 - © 2020 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!