பெரம்பலூர்: வ.களத்தூர் அருகே எரிந்த நிலையில் இரண்டு வயது குழந்தையுடன் தாய் இறந்து கிடந்த சம்பவம் தற்கொலையா? கொலையா? என வி.களத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பிம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (25), இவருக்கும், கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த மஞ்சுளா(20), என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பூபதி,2, என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு ரமேஷ் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து மஞ்சுளா தனது குழந்தையுடன் மாமனார் பூமாலை(60), மாமியார், பூவாயி,(54), ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றர்.
இந்நிலையில் பூமாலை மற்றும் பூவாயி ஆகியோர் இருவரும் தேசிய ஊரக வேலை உறுதிவேலை திட்ட வேலைக்கு நேற்று காலை சென்றுவிட்டதாக தெரிகிறது.
நேற்று மாலை 4 மணியளவில் இருவரும் வீடு திரும்பி வந்து பார்த்தபோது மஞ்சுளா மற்றும் குழந்தை பூபதி ஆகியோர் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர்.
இத்தகவலறிந்த தகவலறிந்த வி.களத்தூர் போலீஸார் மஞ்சுளா, பூபதி ஆகியோரின் பிணத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இரண்டு வயது குழந்தையுடன் பூபதியுடன் மஞ்சுளா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் எரிந்து கொலை செய்தார்களா என்பது குறித்து வி.களத்துõர் போலீஸார் விசாரிக்கின்றனர்.