பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் கருவியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் முன்னிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் மருதராஜா துவக்கி வைத்தார்.
எளம்பலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் கருவியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் முன்னிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா இன்று (19.9.15) துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயக்குமார், எளம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் இராமசாமி, வட்டார மருத்துவ அலுவலர் விஜயக்குமார், மருத்துவ அலுவலர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.