பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று மகா தீபம் ஏற்றப்பட்டது.
பெரம்பலூர் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் எளம்பலூர் பிரம்மரிஷிமலையில் கார்த்திகை தீபம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு, 33வது ஆண்டாக கார்த்திகை தீபம் சிறப்பாக இன்று கொண்டாப்பட்டது. இதையொட்டி இன்று (25ம்தேதி) காலை 6 மணிக்கு கோபூஜையும், 210 சித்தர்கள் யாகமும் நடைபெற்றது.
பின்னர், காலை 10 மணியளவில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலிருந்து தீபம் ஏற்றுவதற்காக 210 மீட்டர் நீளமுள்ள திரி மற்றும் ஆயிரம் கிலோ நெய் மற்றும் செம்பு கொப்பறை ஆகியவை வைக்கப்பட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு யானை மூலம் பேரூர் மடத்து 63 நாயன்மார்கள் சிலைகள், திருவாரூர் சிவனடியார்களுடன் ஸ்ரீசிவராமலிங்கசுவாமி சிவபூதகன வாத்தியங்களுடன் ஊர்வலமாக எளம்பலூர் பிரம்மரிஷி மலைக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் மகாசித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில் பிரம்மரிஷி மலையின் மேல் மாலை 6 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சாதுகளுக்கு வஸ்திரதானமும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், எளம்பலூர், வடக்குமாதவி, சோமண்டாபுதூர், தண்ணீர் பந்தல் மற்றும் சென்னை புதுச்சேரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள், சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளில் இருக்கும் மெய்யன்பர்கள், கலந்து கொண்டனர். வருகை புரிந்து முப்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சினிமாஇயக்குநர்ஸ்ரீரங்கநாதன், சென்னைஉயர்நீதிமன்ற வக்கீல்கள் திவாகர், அன்பரசன், சிங்கப்பூர் ரத்தினவேல், நடராஜாபாபா,
சிங்கைராஜா, தஞ்சாவூர் சண்முகம், திட்டக்குடி ராஜன், எளம்பலூர் ஊராட்சி தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் பெருமாள், குரும்பலூர்
மதிவாணன், டாக்டர் ராஜாசிதம்பரம் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகினிமாதாஜி, இயக்குநர்கள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் அறக்கட்டளை மெய்யன்பர்கள் செய்திருந்தனர்.