பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஆழ்துளை கிணறு குழாய்களை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எளம்பலூர் பிரம்மரிஷிமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீகாகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் தினமும் கோபூஜை, 210 மகாசித்தர்கள் யாகமும் நடந்தது வருகிறது. இங்குள்ள சாதுமடத்திற்கு வந்து செல்லும் சாதுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாது மடத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் ஆழ்துளை கிணற்று குழாய்களை மர்ம நபர்கள் உடைத்து விட்டு சென்று விட்டனர்.
இது குறித்து மகாசித்தர்கள் டிரஸ்ட் இணை நிர்வாகி ரோகினிமாதாஜி மற்றும் வக்கீல் சீனிவாசமூர்த்தி ஆகியோர் எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள சாது மடத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் ஆழ்துளை கிணற்று குழாய்களை இதுவரை 2முறை ஆழ்துளை கிணற்றில் குழாய்களை உடைத்து சேதப்படுத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி குடிநீர் குழாய்களை உடைத்தவர்கள் கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெரம்பலூர் எஸ்பி சோனல் சந்த்ராவிடம் புகார்மனு அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட எஸ்பி சோனல்சந்த்ரா புகார்மனுமீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.