எளம்பலூர் வழியாக பெரம்பலூர் புறவழிச்சாலையை இணைக்கும் புதிய இணைப்புச் சாலையை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது. ஆய்வு செய்தார்.
அதன் விபரம் வருமாறு ;
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதான சாலைகள் முதல், கிராமச்சாலைகள் வரை பெரும்பான்மையான சாலைகள் புணரமைக்கப்பட்டும், புதிதாக அமைக்கப்பட்டும் வருகிறது. கடந்த நான்காண்டுகளில் சுமார் 312 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் மற்றும் சிறு பாலங்களுக்கான கட்டுமானப் பணிகள் ரூ. 210.08 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் உள்ளது. மேலும், நடப்பாண்டில் 55 பணிகள் 63.70 கி.மீ நீளத்திற்கு ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் சாலைகளை மேம்பாடு செய்ய தமிழக முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்கள்
அந்த வகையில் பெரம்பலூர் புறவழிச்சாலைக்கு எளம்பலூர் கிராமம் வழியாக இணைப்பு சாலை அமைக்கும் விதமாக 2.70 கி.மீ. நீளத்திற்கு ரூ. 5.46 கோடி மதிப்பீட்டில் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாலையின் துவக்கம் முதல் முடிவு வரை சென்று பார்த்த மாவட்ட ஆட்சியர் சாலையின் இரு நுழைவுப்பகுதிகளிலும் புறவழிச்சாலையை இணைக்கும் சாலை என்று பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகை அமைக்கவேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை கூறினார்.