சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வண்ண பலூன்களை பறக்கவிட்டு, கண்தான உறுதிமொழி ஏற்றுக் கொண்டு, 200வது ஆண்டு விழாவின் கல்வெட்டினை திறந்து வைத்து, 200வது ஆண்டு சின்னத்தை வெளியிட்டு, மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை புரிந்துவரும் மரு. எஸ். நடராஜனுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்து, கண் விபத்து சிகிச்சை கருத்தரங்கினை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
சென்னை அரசு கண் மருத்துவமனை 1809 ஆம் ஆண்டு லண்டனில் துவங்கப்பட்ட மார்பீல்டு கண் மருத்துவமனைக்கு (London Moorfield Eye Hospital) அடுத்தபடியாக 1819ல் சென்னையில் டாக்டர் இராபர்ட் ரிச்சர்ட்சன் அவர்களால் சென்னை அரசு கண் மருத்துவமனை துவங்கப்பட்டது. தொன்மையான மருத்துவமனைகளில் தெற்காசிய நாடுகளில் முதலிடத்திலும், உலக அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதன் முதலில் 1819-ல் சிறிய மருத்துவமனையாக சென்னை இராயப்பேட்டையில் தொடங்கப்பட்ட இம்மருத்துவமனை 1844-ம் ஆண்டு முதல் எழும்பூருக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிறப்பான சேவையாற்றி சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும் மருத்துவமனையாகும். டாக்டர் கிரிக் பேட்ரிக் என்பவரால் Madras Eye எனும் நோய் இம்மருத்துவமனையில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர் எலியாட்ஸ் என்பவரால் Trephining typeGlaucoma Surgery முதன் முதலில் இம்மருத்துவமனையில் செய்யப்பட்டது. 1926ல் Licentiate Course inOphthalmology இந்தியாவிலேயே முதன்முறையாக துவங்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முறையாக இம்மருத்துவமனையில் 1948ஆம் ஆண்டில் கண் வங்கி (Eye Bank) துவங்கப்பட்டது. இம்மருத்துவமனையில் First Corneal Transplant செய்யப்பட்டது. 1985ஆம் ஆண்டு மண்டல கண் மருத்துவ இயல் நிலையமாக மேம்படுத்ப்பட்டது. International Council of Ophthalmology Exam Centre-ஆக இருக்கிறது.மறைந்த முதலமைச்சர் ஜெயலிதா அவர்களால் 2015ஆம் ஆண்டு College of Optometry துவக்கி வைக்கப்பட்டது. மண்டல கண் மருத்துவ இயல் நிலையத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் மிகவும் தொன்மையானது மற்றும் உலகளவில் புகழ்பெற்றது. இந்த அருங்காட்சியகம் 1819, 1910, 1920 ஆம் ஆண்டுகளில் அப்போதைய மருத்துவ கண்காணிப்பாளர்களால் எழுதப்பட்ட நோயாளிகளின் மருத்துவ விவரங்கள் (Case Sheet,Charts, Diagram) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் இந்திய மற்றும் உலக அளவில் பிரசித்தி பெற்றது. Elliot’s பள்ளி மிகவும் பாரம்பரியமிக்க கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிம் இந்தியாவிற்கு மட்டுமன்றி உலகில் உள்ள கண் மருத்துவமனைகளுக்கு ஒரு பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாகும்.
ஒவ்வொரு வருடமும் 250 முதல் 300 Corneal Transplant செய்யப்படுகிறது. கண் அழுத்த நோய்க்கான உயர் சிறப்பு சிகிச்சை மையமாக கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து இங்கு சிகிச்சைப் பெறுகின்றனர். Orbit and Oculoplasty Department கடந்த 50 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. 75 முதல் 100 அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. செய்யப்படுகிறது. கண் மருத்துவர் மற்றும் மயக்கியவியல் மருத்துவர்களைக் கொண்டு 24 மணிநேரமும் செயல்படும் கண் விபத்து சிகிச்சை மையம் (Ocular Trauma Centre Service) செயல்பட்டு வருகிறது. 1985 முதல் 2.60 இலட்சம் கண்புரை அறுவை சிகிச்சை (Cataract Surgery) செய்யப்பட்டுள்ளது. மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் Scientific Paper presentation இந்நிறுவனத்தால் செய்யப்படுகிறது.
இம்மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு (CMCHIS) திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.2.78 கோடி செலவில் 2,945 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். மேலும் ரூ.5.12 கோடி மதிப்பில் 32 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூநடந டீயீவாயஅடிடடிபல திட்டத்தின் மூலம் நவீன உபகரணங்கள் வழங்கி சர்க்கரை நோய் பாதிப்புகள் பரிசோதிக்கப்படும்.
மேலும், ரூ.5 கோடி மதிப்பில் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவமனை பிரிவுகள் நவீனப்படுத்தப்படும். மேலும், ரூ.3.25 கோடி மதிப்பில் கீழ்ப்பாக்கம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கண் சிகிச்சை பிரிவுகளுக்கு அதிநவீனக் கருவிகள் வழங்கப்படும். ரூ.1.64 கோடி மதிப்பில் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கென தனிப்பிரிவு அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!