எஸ்.டி., பட்டியலில் சேர்க்க கோரி மத்திய, மாநில அரசு அலுலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது.
பெரம்பலூர்: ஆக. 31- தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் நடந்தது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் காரை.சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நம்பியார் வரவேற்றார். ஆலோசகர் நாகை விஜயசுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் கோவை கணேசன், தஞ்சாவூர் சுந்தரராஜ், வேலூர் பொன்னையன், சென்னை பாபு, விருத்தாசலம் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நரிக்குறவன் என்கிற குருவிக்காரன் இன மக்களை எஸ்.டி., பட்டியலில் சேர்க்க மத்திய, மாநில அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வது, இக்கோரிக்கையை வலியுறுத்தி மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் முன்பு வெகுஜன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் பெண்ணாடம் ராஜா, கரூர் மாணிக்கம், ஆனந்த், திருச்சி தங்கமணி, சவுந்தரராஜ், மலையப்பநகர் ரகு, மயிலாடுதுறை பாண்டியராஜன், சேகர், பாபு, புதுக்கோட்டை மணி, அறந்தாங்கி முத்துசாமி, திண்டுக்கல் தேவராஜ், காரைக்குடி அஞ்சம்மை, கீரனூர் ராஜேந்திரன், அரியலூர் ஜெயமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனனர்.