பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஏரியில் தவறி விழுந்த விவசாயி ஒருவர் இன்று உயிரிழந்தார்.
குன்னம் அருகேயுள்ள மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகசபை மகன் பழனிச்சாமி( 40) விவசாயி. இவர், இன்று காலை அந்த கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் நடந்து சென்றபோது, தவறி ஏரியில் விழுந்ததாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கிய பழனிச்சாமி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, அவரது மனைவி சுமதி (32) அளித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.