பெரம்பலூர் : அரசு நடத்திய சூப்பர் 30 சிறப்பு வகுப்பில் பயின்று மருத்துவப்படிப்பிற்கு தேர்வான மாணவனின் உயர்கல்வி பயில எல்.ஐ.சி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் ரூ.30 ஆயிரம் நிதியுதவி வழங்கினர்
இந்த ஆண்டு (2014 -15) சூப்பர் 30 சிறப்பு வகுப்பில் பயின்று மருத்துவ படிப்பிற்கு செல்லும் 3 மாணவர்களில் இரூரைச் சேர்ந்த பா.பிரசாந்த் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண்களும், மருத்துவ கல்லூரி சேர்க்கை தகுதி மதிப்பெண் 193.25-ம் பெற்றும் உள்ளார்.
இவருக்கு கலந்தாய்வில் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
ஏழை மாணவனின் உயர்கல்வி பயில எல்.ஐ.சி காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் ரூ.30 ஆயிரம் நிதியுதவி வழங்கினர்