பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்திசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஏ.பி. பரதனின் மறைவுக்கு இன்று மாலை இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஏ.பி. பரதன் கடந்த 2 ஆம் தேதி காலமானார், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்டச் செயலர் தமிழ்மாணிக்கம், மதிமுக மாவட்டச் செயலர் எஸ். துரைராஜ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில நிர்வாகி வழக்குரைஞர் பி. காமராஜ், விடுதலை சிறுத்தைகள் கடசியின் முன்னாள் மாவட்டச் செயலர்கள் ஜெ. தங்கதுரை, இரா. கிட்டு, வீ. செங்கோலன், தமிழ்நடு முஸ்லீம் முன்னேற்றக் கழக நிர்வாகி குதரத்துல்லா உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.