ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
8 அணிகள் பங்கேற்ற 11வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெற இறுதிப்போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடன் மோதுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் கோப்பையை வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 2 ஆண்டு தடைக்கு பிறகு திரும்பிய சென்னை அணி 3வது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேபோல், பேட்டிங், பவுலிங்க் என இரண்டிலும் சமபலத்துடன் இருக்கும் ஹைதராபாத் அணி 2வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.