பெரம்பலூர் : குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் அரசின் அனுமதியின்றி, தனிநபரான அழகப்பன் மகன் சதாசிவம் என்பவர் அவ்வூரில் கள்ளத்தனமாக நீண்ட நாட்களாக வெளியில் மது வாங்கி வந்து விற்பனை செய்து வருவதாகவும், இது குறித்து குன்னம் காவல் நிலையத்தினருக்கும், குன்னம் வட்டாசியருக்கும் தடுக்க கோரி புகார் மனு கொடுத்தும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.