கணினி மூலம் தொகுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஆதார் அடையாள எண்ணைக் கொண்டு ஒரே வாக்காளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளனரா என்று இணை தலைமை தேர்தல் அலுவலர் அஜய்யாதவ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக அவர் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மீனாட்சி, சார் ஆட்சியர், மதுசூதன் ரெட்டி , வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
பின்னர் சிறுவாச்சூர், விஜயகோபாலபுரம், சாத்தனூர் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வாக்காளர் பட்டியலில் வாக்காளாரின் புகைப்படம் மாற்றமாக உள்ளதா,
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் இடம் பெற்றுள்ளதா என்று ஆய்வு செய்தார். இதனடிப்படையில் நேரடியாக வீடுகளுக்கு சென்று வாக்காளர்களிடமும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது சார் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி. உள்பட அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.