அம்மா சிமெண்ட் விற்பனை திட்டத்தின் கீழ் ஒரு கோடி மூட்டைகள் விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
அம்மா சிமெண்ட் விற்பனை திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 5.17 லட்சம் மெட்ரிக் டன் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு கோடி சிமெண்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், ஏறக்குறைய 1,33,595 பயனாளிகள் பயன்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்மா சிமெண்ட் திட்டத்தை பற்றி பொதுமக்கள் அறிந்துக்கொள்ள 180042522000 என்ற எண்ணை தொடர்புக்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.