பெரம்பலூர்: ஓய்வூப் பெற்ற இராணுவ வீரர்கள், ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் முன்பு முப்படையை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மாவட்டத் தலைவர் தேவராஜன் தலைமையில் ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
43 ஆண்டுகளாக கோரி வரும் இக்கோரிக்கையை நிறைவேற்றவிட்டால் அடுத்த கட்ட பல போராட்டங்களை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
படைவீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.