பெரம்பலூர்: ஒரு மாத காலத்திற்கு பணியை முடிக்க விசுவகுடி நீர்த்தேக்க கட்டுமான ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் அன்னமங்கலம் அருகே உள்ள பச்சைமலைத் தொடரில் விசுவகுடி நீர்த் தேக்கம்36 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தொண்டடைமாந்துறை, வெங்கலம், அன்னமங்கலம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 1400 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் பாசனம் வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீர்த் தேக்கத்தின் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில் உள்ளது. அதனை இன்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அமஹமது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, ஆட்சியர் மீதமுள்ள 20 சதவீத பணிகளை ஒருமாத காலத்திற்குள் ஒப்பந்தாருக்கு முடிக்க உத்திரவிட்டார். ஆட்சியருடன் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.