பெரம்பலூர் : நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் நடத்தை விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மொபைல்போன் ரீசார்ஜ் செய்யும் முகவர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் கூட்டஅரங்கில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் விதிமுறை மீறல்கள் எதுவும் நிகழா வண்ணம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை, தீவிர கண்கானிப்பக் குழு, கிராம விழிப்புணர்வு குழுக்கள் என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் சட்டமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திட மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மொபைல் போன் ரீசார;ஜ் செய்யம் முகவர்களாகிய நீங்கள் உங்களின் முழு ஒத்துழைப்பை அளித்திட வேண்டும்.
மேலும், தாங்கள் தினந்தோறும் செய்யும் ரீசார்ஜ் குறித்த தகவல்களை சிறப்புப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் தெரிவித்திட வேண்டும். அவ்வாறு ரீசார்ஜ் செய்யப்படும் நாள்களில் திடீரென்று அதிகப்படியான ரீசார்ஜ்கள் செய்யப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பேபி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கள்ளபிரான் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.