பெரம்பலூர் : வேப்பந்தட்டையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் வட்டார பொதுக்குழு கூட்டம் தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் பெருமாள் வரவேற்றார்.
கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு, மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்திற்கான புதிய கட்டிடத்தை விரைந்து கட்டி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் செயலாளர் சையத்பாஷாஜான், மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் இணைசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.