பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் வட்டார அளவிலான புதிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடந்தது.
ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் வட்டாரக்கிளையின் தேர்தல் பொதுக்குழு கூட்டம், பெரம்பலூர் மவுலானா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். தேர்தல் துணை ஆணையர் பெரியசாமி, மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடந்தத் தேர்தலில், புதியத் தலைவராக செல்லப் பிள்ளை, துணைத்தலைவராக பாலசுப்ரமணியன், செயலாளராக பெரியசாமி, இணைச்செயலாளராக ராஜூ, பொருளாளராக பக்கிரிசாமி, மாவட்ட பிரதிநிதியாக சந்திரன், தணிக்கையாளர்களாக நல்லுசாமி, வெங்கடாசலம் ஆகியோர் தேர்வுசெய்யபட்டனர்.
தேர்தல் ஆணையர் தங்கராசு புதிய வட்டாரப் பொறுப்பாளர்களாகத் தேர்வுசெய்யப்பட்டவர் களுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். பெரம்பலூர் வட்டாரசெயலாளர் செல்லப்பிள்ளை வரவேற்றார். முடிவில் வட்டார செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.