தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர்கள் தின விழாக்கூட்டம் நேற்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீரங்கன் தலைமை வகித்தார். ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, கருணாநிதி, முத்துசாமி, பொன்.கலியமூர்த்தி,
தங்கராஜ், மகேஸ்வரன், இளவரசன், நாகராஜன், ராஜேந்திரன், மணி, சந்திரகாசன், பரமசிவம், தமிழரசன், விஜயராமு, கண்ணன், செல்வராஜ், அசரப்புன்னிசா ஆகியோர்
முன்னிலை வித்தனர்.
கூட்டத்தை இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட துணைத்லைவர் கணேசன் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் முருகேசன் கருத்துரை வழங்கினார். மாநில
துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார். ஆளவந்தார், அகஸ்டியன், வீரமணி, தங்கவேல், செல்வமணி, செல்வராஜன் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் அனைவருக்கும் பஸ்பாஸ் வழங்கிட வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். சத்துணவு ஊழியர், அங்கன்வாடி பணியாளர், ஊராட்சி எழுத்தர்கள் மற்றும் வனத்தோட்ட காவலர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக 3 ஆயிரத்து 50 வழங்கிட வேண்டும்.
அரசாணை 363ஐ திருத்தம் செய்ய வேண்டும். 7வது ஊதியக்குழுவின் முழு பயன்கள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.1.50 லட்சம் வழங்கிட வேண்டும். சேவைகால ஆண்டு உயர்வு வழங்கிட வேண்டும். அனைவருக்கும் தர ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
விழாவில் அனைத்துறைகளை சேர்ந்த ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் மாயவேலு வரவேற்றார். முடிவில் ஓய்வு பெற்ற
ஓட்டுநர் சங்க மாவட்ட தலைவர் வேணுகோபால் நன்றி கூறினார்.