பெரம்பலூர் : ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது தலைமையில் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை ஓய்வூதிய துணை இயக்குநர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் ஓய்வூதியதாரர்களால் ஏற்கனவே ஓய்வூதிய நிலுவை, திருத்திய ஓய்வூதியம், மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் ஊதிய நிலுவைத் தொகை வழங்கக் கோரி அளிக்கப்பட்டிருந்த 18 மனுக்கள் தொடர்பாக மனு அளித்த ஓய்வுதியதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. மேலும் ஓய்வூதியம் தொடர்பான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஓய்வூதியதாரர்களால் இக்கூட்டத்தில் புதிதாக அளிக்கப்பட்ட 9 மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் தக்க நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதிலை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கார்த்தியாயினி, மாவட்ட கருவல அலுவலர் லலிதா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் ஓய்வூதிய சங்க நிர்வாகிகள், ஓய்வூதியதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.