பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் அப்துல்ரகுமான் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாயவேலு,மாவட்ட செயலாளர் மணி,முருகேசன்,கலியமூர்த்தி ஆகியோர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என்ற தமிழக முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்சம் ரூ.3050 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினனார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர், சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பரமசிவம் வரவேற்றார். கிருஷ்ணன் நன்றி கூறினார்.
இதே போன்று மாவட்ட்த்தில் உள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், ஆலத்தூர், குன்னம் வட்டாச்சியர் அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டங்களை இதே சங்கத்தை சேர்ந்தவர்கள் நடத்தினர்.