ORS
பெரம்பலூர்: குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் வகையில் ஓ.ஆர்.எஸ்., மருந்து வழங்கும் தீவிர விழிப்புணர்வு முகாமை பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்செல்வன் முன்னிலையில், பெரம்பலூர் ஆட்சியர் தரேஷ்அஹமது சங்குப்பேட்டை அங்கன்வாடி மையத்தில் துவக்கி வைத்தார்.
இதில் நகராட்சி தலைவர் ரமேஷ், பெரம்பலூர் யூனியன் சேர்மன் ஜெயக்குமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் உதயக்குமார், துணை இயக்குனர் சேரன், நகராட்சி ஆணையர் முரளி, ஒருங்கிணைத்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட கொல்லை நோய் தடுப்பு அலுவலர் அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.