அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராஜேஸ்வரி என்பவருக்கு டெங்கு இல்லை -சர்க்கரை நோயால் ஏற்பட்ட காய்ச்சலே காரணம் – அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். எம்.சசிகலா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் பட்டாக்குறிச்சி கிராமம் வடக்குத்தெருவைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 40), கடந்த டிச. 16ம் தேதி அன்று மாலை 7.35 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் சர்க்கரை நோய் அளவுக்கு அதிகமாக இருப்பதால் நோய்தொற்று ஏற்பட்டு காய்ச்சல் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான உரிய சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட்டது.
மேலும், டெங்கு தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டதில் அவருக்கு டெங்குகாய்ச்சல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. அளவுக்கு அதிகமான சர்க்கரை நோயால் நோய்த்தொற்று ஏற்பட்டு காய்ச்சல் அதிகமானதால் ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், என இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.