கடலூர்: சென்னையில் இருந்து புறப்பட்ட கடலோர காவல் படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடலூர் அருகே மாயமானது எரிந்து கடலில் விழுந்தை கண்ணால் கண்ட கடலூர் மீனவர் தகவல்
நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் இருந்து கடைசியாக, இரவு சுமார் ஒன்பதரை மணியளவில் திருச்சி கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் கிடைத்துள்ளது. அதன் பிறகு விமானம் ரேடார் சிக்னலில் இருந்து மறைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னைக்கு தெற்கே 95 நாட்டிக்கல் மைல் தொலைவில் காரைக்காலுக்கு அருகில் விமானம் பறந்த போது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, அந்த பகுதிகளில் விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் கடலோர காவல்படைக்கு சொந்தமான 5 கப்பல்களும், கடற்படை கப்பல்கள் நான்கும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், கடற்படைக்கு சொந்தமான விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் . மீனவர்களின் உதவியையும் கடலோர காவல் படையினர் நாடியுள்ளனர்.
காணாமல் போன விமானத்தில் 2 விமானிகள் உட்பட 3 பேர் இருந்தது தெரியவந்துள்ளது. டார்னியர் ரக விமானம் கடந்த ஆண்டே கடலோர காவல் படைக்கு வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானம் தொலைந்ததால் இன்று தொடங்கிவிருந்த ஆப்ரேஷன் ஆம்லா பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் நடைபெறுவதாக இருந்த 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆப்ரேஷன் ஆம்லா பாதுகாப்பு ஒத்திக்கை எப்போது நடத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது .
இந்நிலையில் காணாமல் போன விமானம் எரிந்து கடலில் விழுந்ததை பார்த்ததாக கடலூர் மீனவர் முகேஷ் தகவல் தெரிவித்துள்ளார் புதுச்சேரி கடலோர காவல் படை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அளித்த தகவலின் பேரில் தேடுதல் பணி முடக்கி விடப்பட்டுள்ளது.