பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டட இடிபாடுகளில் இன்று சிக்கிக்கொண்ட பெண் மயிலை தீயணைப்பு துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டட இடிபாடுகளுக்கிடையே பெண் மயில் ஒன்று சிக்கிக்கொண்டது.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜூ தலைமையிலான மீட்புக் குழுவினர் அப்பகுதிக்கு சென்று, கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த மயிலை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.