மாவட்ட ஆட்சியர்(பொ) ப.மதுசூதன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்; மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய நான்கு வட்டங்களிலும் பொது இ-சேவை மையங்களை வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைத்து நிர்வகித்து வருகிறது.
இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாட்களை தவிர பிற நாட்களில் காலை 09.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை செயல்படும். பொது மக்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று அரசின் சேவைகளைப் பெறலாம்.
ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவா;கள் பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
ஓப்புகைச் சீட்டு பதிவு எண்ணை பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ.40. கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஏற்கனவே ஆதார் எண் கிடைக்கப் பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார்அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ரூ.30. கட்டணமாக வசூலிக்கப்படும். என மாவட்ட ஆட்சியர்(பொ) தெரிவித்துள்ளார்.