பெரம்பலூர் : வேப்பந்தட்டையை வட்டம் வெங்கலம் கிராமத்தில கணவன் சரியாக வீட்டுக்கு வராததால் மனமுடைந்த 2 குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்; மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கலத்தை சேர்ந்தவர் மும்மூர்த்தி (29). இவர் சேலம மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள புத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் மகள் மகேஸ்வரியை ( 25 ) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது யோகப்பிரியா (5), ரசிகா (3) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் மும்மூர்த்தி வீட்டில் சொல்லாமல் அவ்வப்போது வெளியூர் சென்று விட்டு சில நாட்கள் கழித்துதான் வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை மகேஸ்வரியின் 2 குழந்தைகளும் வீதியில் விளையாடிக்கொண்டு இருந்ததைப்பார்த்த உறவினர்கள் குழந்தைளை அழைத்து வீட்டில் விட சென்றுள்ளனர். அப்போது வீட்டிற்குள் மின்விசிறியில் மகேஸ்வரி பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது தொடர்பாக அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து யாரேனும் தூக்கில் தொங்கவிட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மகேஸ்வரிக்கு திருமணம் நடந்து 6 ஆண்டுகளே ஆகியுள்ளதால் வரதட்சணை கொடுமையால் இறந்தரா என பெரம்பலூர் கோட்டாச்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.