இறந்து மூன்று மாதமான தனது கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி உறவினர்களுடன் வந்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், சாக்கரை ஆலை எறையூரை சேர்ந்தவர் கீதா (30). இவருடைய கணவர் ராஜேந்திரன்(35) வேலைத்தேடி சவுதிக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்றார். அங்கு, கடந்த ஜுன் 6ம் தேதி இறந்து விட்டதாகவும், உடல் சவுதி அரசு மருத்துவமனையில வைக்கப்பட்டுள்தாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பல முறை தொடர்பு கொண்டும் அவரின் உடலை பெற முடியவில்லை. இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இறந்து போன தனது கணவரின் உடலை பெற்றுத்தரக் கோரி மீண்டும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். இவர்களுக்கு அருண்குமார்(15), சபரி (11) என்ற மகன்கள் உள்ளனர்.