உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தொடங்கி 14 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை கொண்டாடும் விதமாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மதுரைக்கிளை வழக்கறிஞர் சங்க கட்டடத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.மதுரைக்கிளை வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடந்த விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், நீதிபதி குலுவாடி ரமேஷ், மதுரைக்கிளையின் நிர்வாக நீதிபதி சி.டி.செல்வம் உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அகர்வால் மருத்துவமனையின் இலவச கண் பரிசோதனை முகாமினை திறந்து வைத்தார்.பின்னர் பேசிய அவர் தனது வீடான தமிழகத்தில் இருந்து கனத்த இயத்துடன் விடை பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம் தனது வீடு போன்றது என்று கூறினார். தான் எங்கு சென்றாலும் தமிழகம் எனது நினைவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.