பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் மதுரா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வணிகர் நல சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ணாபுபுரம் கிளை தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். வணிகர் சங்க பேரவை பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட இணை செயலாளர் ரவிசுந்தரம், மதுரா மெட்ரிக் பள்ளி தாளாளர் சேகர், முன்னாள் செயலாளர் சீத்தாராமன், முன்னாள் பொருளாளர் சந்திரசேகர் மற்றும் பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் சமீபத்தில் உயிரிழந்த வணிகர்களுக்கும், மழையினால் உயிரிழந்தவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் வரும் மே மாதம் நடைபெரும் மாநில மாநாட்டில் குடும்பத்தோடு கலந்து கொள்வது, உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட பொருப்பாளர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். கூட்டத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொருளாளர் ரமேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். முடிவில் செயலாளர் ராஜா நன்றி கூறினார்.